பாக்கிஸ்தானிய கல்வியாளரான சியாவுதீன் யூசப்சாய் உலகம் கேட்க விரும்பாத ஒரு எளிய உண்மையை நினைவூட்டுகிறார். பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் கல்வி, சுயாட்சி மற்றும் ஒரு சுயாதீன அடையாளத்திற்கான சம வாய்ப்புகளுக்கு தகுதியானவர்கள். அவர் தனது சொந்த வாழ்க்கையிலிருந்தும், 2012 ல் பல்ளிக்கு செல்ல துணிந்ததற்காக தலிபான்களால் சுடப் பட்ட அவரது மகள் மலாலாவின் வாழ்க்கையிலிருந்தும் கதைகளைச் சொல்கிறார். "என் மகள் ஏன் மிகவும் வலிமையானவள்?" யூசப்சாய் கேட்கிறார். "ஏனென்றால் நான் அவளது சிறகுகளை வெட்டவில்லை."

