இரசாயனமில்லா, பூச்சிக்கொல்லியில்லா உணவு சீனாவில் அரிதாகும்: 2016 ம் ஆண்டில், சீன அரசாங்கம் 5 லட்சம் உணவு பாதுகாப்பு மீறல்களை வெறும் 9 மாதங்களில் தெரியப்படுத்தியது. பாதுகாப்பான, நிலையான உணவில்லாததனால், TED ஃபெலோ மட்டில்டா ஹோ சீனாவின் முதல் இணைய உழவர் சந்தையை நிறுவப்படுத்தி, பூச்சிக்கொல்லிகள், உயிர் எதிரிகள் மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை அமல்படுத்தினார். அவர்களது அமைப்பின் மூலம் எப்படி உள்ளூர், இயற்கையான உணவுகளை தேவைப்படும் குடும்பங்களுக்கு எப்படி வழங்குகின்றார் என பகிர்ந்துக்கொள்கிறார்.

