ஐவரைக் காப்பாற்ற ஒருவரைப் பலியிடுவீர்களா?
5,591,507 plays|
எலியனோர் நெல்சன் |
TED-Ed
• January 2017
தப்பிக்க இயலாத ஐந்து தொழிலாளர்களை நோக்கி தண்டவாளத்தில ட்ராலி ஒன்று தடம் புரண்டு வருவதை நீங்கள் பார்ப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதே வேளையில், நீங்கள் நிற்கும் இடத்தில் அந்த ட்ராலியை மாற்று பாதைக்கு திருப்பும் பொத்தான் உள்ளது. ஆனால் ஒரு பிரச்சனை உள்ளது. அந்த பாதையிலும் ஒரு தொழிலாளி இருக்கிறார், ஆனால் ஒருவர் மட்டுமே. நீங்கள் என்ன செய்வீர்கள்? ஐவரைக் காப்பாற்ற ஒருவரை பலியிடுவீர்களா? ட்ராலி பிரச்சனை என அறியப்படும் நெறிமுறை குழப்ப சூழ்நிலையை எலியனோர் நெல்சன் விவரிக்கிறார். [இயக்கியவர் - ஈயோயின் டஃப்பி, விவரிப்பவர் - அடிசன் ஆண்டர்சன், ஒலி - டேவிட் கேம்ப்].