பிரீன் பிரவுன், ஆராய்ச்சி செய்வது, மனித இணைப்புகளைப் பற்றி -- நாம் பிறருடைய உணர்வை அறிந்து செயல்படும் திறனை, பிறரிடம் சொந்தம் கொண்டாடும் திறனை மற்றும் அன்புக்கொள்ளும் திறனைச் சார்ந்தது. TEDxHouston இல் நடந்த மாநாட்டில், தமது நகைச்சுவை கலந்த சொற்பொழிவில், நம் மனங்களில் ஆழமாக பதியும் முறையில், அவர் தமது ஆராய்ச்சியில் கற்றுக்கொண்ட ஆழ்ந்த உள்நோக்கத்தை பகிர்ந்து கொள்கிறார். தம்மைப் பற்றியும், மனிதத்தன்மையைப் பற்றியும் அறியச் செய்த, ஒரு தனிப்பட்ட தேடலில் தம்மை அழைத்துச் சென்ற, ஆராய்ச்சிப் பற்றி பேசுகிறார். எல்லோரிடமும் பகிர்ந்துக் கொள்ளக் கூடிய, ஒரு அற்புதமான சொற்பொழிவு இது.
