கல்வி எப்படி என் வாழ்க்கையை மாற்றி எழுத உதவியது
உங்கள் நோக்கத்தைக் கண்டுபிடிப்பதை விட பெரிய சுதந்திரம் எதுவும் இல்லை என்கிறார் கல்விக்காக வாதாடும் அஷ்வீதா ஷெட்டி. கிராமப்புற இந்தியாவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஷெட்டி, தனது சமூகத்தின் சமூக விதிமுறைகள் அவரது கனவுகளை நசுக்கவும், அவரது குரலை அடக்கவும் விடவில்லை. இந்த தனிப்பட்ட உரையில், கல்வியின் மூலம் அவர் எப்படி சுயமதிப்பைக் கண்டார் என்பதையும் -- மற்ற கிராமப்புற இளைஞர்களின் திறனை ஆராய அவர் எவ்வாறு பணியாற்றுகிறார் என்பதையும் பகிர்ந்து கொள்கிறார். "ஏதோ ஒன்று நம்மை எழுப்பி, ஒரு புதிய உலகம் திறக்கும் வரை, நாம் அனைவரும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு யதார்த்தத்தில் பிறந்திருக்கிறோம் --" என்று ஷெட்டி கூறுகிறார்.

