எதற்காக நாம் வெவ்வேறு எதிர்காலங்களை கற்பனை செய்ய வேண்டும்.
அநாப் ஜெயின் எதிர்காலத்திற்கு உயிரூட்டுகிறார், நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் உலகை, தொட்டு, பார்த்து மேலும் உணரும் சாத்திய அனுபவங்களை உருவாக்குகிறார். உதாரணமாக, நமக்கு நம் தெருக்களை ரோந்து செய்யும் புத்திசாலியான இயந்திரங்கள் வேண்டுமா, அல்லது நமது மரபில் வரும் மரபணுக்கள் நம் சுகாதார பராமரிப்பை தீர்மானம் செய்ய வேண்டுமா? ஜெயினுடைய திட்டங்கள், நாம் ஏன் நமக்குத் தேவையான உலகிற்காக போராடுவது முக்கியம் என்று காண்பிக்கின்றன. இந்த கண்திறக்கும் பேச்சில், சாத்தியமான எதிர் காலத்தின் ஒரு க்ண்ணோட்டத்தைப் பாருங்கள்.

